இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2024-05-01 18:15 IST   |   Update On 2024-05-01 18:15:00 IST
  • ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல் வரவேற்றார்.
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முதலாக வருகை தந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என கூறப்பட்டது.

அதன்படி, ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "குடியரசுத் தலைவர் ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில் மற்றும் குபேர் டீலாவில் சாமி தரிசனம் செய்வார்" என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதற்காக, உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம், திரவுபதி முர்மு, கவர்னர் இருக்கும் படத்துடன் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உ.பியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முதலாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News