இந்தியா

இந்தியாவை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்- ராகுல், கார்கே பாராட்டு

Published On 2024-08-09 04:40 GMT   |   Update On 2024-08-09 04:40 GMT
  • அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.
  • நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.

ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவிற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 முழுவதும் அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.

இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ர்ஜூன கார்கே நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில், " ஒருமுறை சாம்பியன்.. எப்போதும் சாம்பியன்!

நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத ஆர்வத்திற்குச் சான்றாகும்.

உங்கள் குறிப்பிடத்தக்க 89.45 மீ எறிதல் உங்களுக்கு ஒரு மேடைப் பூச்சுக்கு உதவியது மட்டுமல்லாமல் ஒரு தேசத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது.

பிரகாசித்து புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருங்கள். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News