உலகம்

சந்திரயான் 3 வெற்றி - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து

Published On 2023-08-23 17:29 GMT   |   Update On 2023-08-23 18:37 GMT
  • விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் சாதனைக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
  • சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

மாஸ்கோ:

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை.

தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம். அறிவியல் மற்றும் பொறியியலில் இந்தியா அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கான சான்றாகும் இது என வாழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News