இந்தியா

உ.பி.யில் உறுதியான இந்தியா கூட்டணி: காங்கிரசுக்கு 11 தொகுதிகளை ஒதுக்கியது சமாஜ்வாதி

Published On 2024-01-27 08:30 GMT   |   Update On 2024-01-27 09:49 GMT
  • இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
  • உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

லக்னோ:

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் அனைத்துக் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்

இதற்கிடையே, மத்தியில் உள்ள பா.ஜ.கவை எதிர்க்க அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News