டெல்லி போன்று மும்பையிலும்... சஞ்சய் ராவத் சொன்னது என்ன?
- ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
- இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.
மும்பை:
ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். ஜூன் 4-ம் தேதி ஆட்சி மாறப்போகிறது. இன்றும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் நடக்கிறது என தெரிவித்தார்.