அதிர்ச்சியை ஏற்படுத்திய 'கொசு சூறாவளி'
- கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
- ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.
தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.
பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.