இந்தியா
தெலுங்கானாவில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற சிறப்பு யாகம்
- 11 நாள் மகா சண்டி யாகம் நல்லா சுரேஷ்ரெட்டி என்பவர் நடத்துகிறார்.
- 35 வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
திருப்பதி:
தெலுங்கான மாநிலம் பாலோஞ்சாவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற 11 நாள் மகா சண்டி யாகம் நல்லா சுரேஷ்ரெட்டி என்பவர் நடத்துகிறார்.
மஹான்யபூர்வக ஏகாதச ருத்ராபிஷேகம், சூரிய நமஸ்காரங்கள், சுப்ரமணியேஸ்வர ஸ்வாமி ஆராதனை, ஷத சண்டி ஹோமம், மஹா சுதர்ஷன ஹோமம், மஹா நாராயண ஹ்ருதய கவச்ச பாராயணம் ஆகியவை தினமும் நடக்கிறது. 35 வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
பாலோஞ்சா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.
மினசோட்டா ஆளுநரும், அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளருமான டிம் வால்ஸ், ஹாரிஸின் வெற்றிக்காக யாகம் செய்ததற்காக நல்லா சுரேஷ்ரெட்டியை பாராட்டி செல்போனில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளார். இந்த யாகம் நாளை நிறைவடைகிறது.