இந்தியா

'ஜம்மு காஷ்மீரில் கிராம வாசிகளை அடித்துத் துன்புறுத்திய ராணுவத்தினர்'.. பாய்ந்தது விசாரணை

Published On 2024-11-22 10:22 GMT   |   Update On 2024-11-22 10:22 GMT
  • குவாத் கிராமத்தை சேர்ந்த 5 பேர் விசாரணைக்காக ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஆப்ரேஷனின் போது பொதுமக்களை ராணுவத்தினர் அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் [Kishtwar] மாவட்டத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குவாத் கிராமத்தை சேர்ந்த 5 பேரை விசாரணைக்கு ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்ற ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் முகல் மைதான் என்ற பகுதியில் வைத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது.

 

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கிஷ்த்வார் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக கிஷ்த்வார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News