இந்தியா
தேசியக்கொடியுடன் டிரோனை பறக்க விட்டு வளர்ச்சி பணிகளை காட்டிய மத்திய மந்திரி
- குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது.
- வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆவார். இவர் குவாலியரில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை காண்பிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் டிரோனை இயக்கி உள்ளார்.
குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது. இதுதொடர்பான வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுதொடர்பான அவரது பதிவில், ஆளில்லா விமானம் மூலம் குவாலியரில் நடைபெற்றுள்ள 9 வளர்ச்சி பணிகளை காட்சிப்படுத்தியது மறக்க முடியாத தருணம்.
இந்த திட்டங்கள் குவாலியர் மக்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் சின்னமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.