பெண்களை அவமரியாதை செய்யும் 'அரக்கன்'.. உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான் - கங்கனா ரனாவத்
- உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்
- கங்கனா ரனாவத் பங்களாவி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது என்று மாநகராட்சி இடித்தது
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
பொதுவெளியில் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கண்டனத்துக்கு உள்ளாகும் எம்.பி. கங்கனா பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய பஞ்சாப், அரியானா விவசாயிகளைப் பயங்கரவாதி என கூறி சர்ச்சை செய்தார்.
இதற்காக அரியானா விமான நிலையத்தில் வைத்து சிஎஸ்ஐஎப் பெண் அதிகாரி குல்விந்தர் கவுர் என்ற பெண்ணிடம் கங்கானா கன்னத்தில் அரை வாங்கிய சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடித்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த இந்தியா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறித்து கங்கனா காட்டமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்,பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே ஒருவரை கடவுள் என்றும் அரக்கன் என்றும் அடையாளம் காண முடியும்.
பெண்களை இழிவு செய்யும் அரக்கன் உத்தவ் தாக்கரே. சாத்தானுக்கு நேர்ந்த அதே முடிவை அவர் சந்தித்துள்ளார். பெண்களை அவமதிக்கின்றவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. எனது வீட்டை இடித்து என்னை வார்த்தைகளால் பழித்தவர்கள் அவர்கள். வளர்ச்சிக்கு வாக்களித்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி, பிரதமர் மோடி மகத்தான தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
பங்களா
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாரஷ்டிர அரசு இருந்தபோது பாந்த்ரா மேற்குபகுதியில் இருந்த கங்கனா ரனாவத் பங்களாவின் சில பகுதிகள் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள்
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அஜித் பவார் சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணியை சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.