இந்தியா
ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
- பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார்.
- அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
சாகர்:
மத்தியபிரதேச மாநிலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் மண்டல கமிஷனராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்.
இவருக்கு எதிராக பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார். அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் வருங்கால வைப்பு நிதி அதிகாரி சதீஷ்குமாரை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை அவர் வாங்கினார். அப்போது மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் அவரை வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.