பெங்களூரில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.53 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
- வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து ஹாலியாவை சேர்ந்த தர்மராஜ் குட்ரே என்பவரை கைது செய்தனர்.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெலகாவி மாவட்டம், தேர்தலையொட்டி கானாபுரா தொகுதியில் உள்ள நந்தகாட் பகுதியில் இன்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.19,08,420 மதிப்புள்ள 395.7 கிராம் தங்கம் மற்றும் 28.065 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அதனை அனைத்தும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹாலியாலில் இருந்து கக்கரைக்கு பில் இல்லாமல் நகைகளை கடத்தியது தெரியவந்தது. இந்த காரில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் இருந்தது. 53,33,724 மதிப்புள்ள கார் உட்பட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹாலியாவை சேர்ந்த தர்மராஜ் குட்ரே என்பவரை கைது செய்தனர்.