இந்தியா
டெல்லியில் இன்று அதிகாலை பி.வி.சி. மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
- ஒரு கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த கடை தீப்பிடித்து எரிந்தது.
- விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள திக்ரி கலனில் பி.வி.சி. மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இன்று அதிகாலை இங்குள்ள ஒரு கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த கடை தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அந்த தீ மார்க்கெட் முழுவதும் பரவியது.
இது பற்றி அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் 25 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுக்குள் வந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். இந்த விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது.