இந்தியா
பஞ்சாபில் எல்லை தாண்டி வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
- பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் சர்வதேச எல்லையை கடந்து இந்திய எல்லைக்குள் ஒரு மர்ம டிரோன் நுழைந்தது.
- டிரோன் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் சர்வதேச எல்லையை கடந்து இந்திய எல்லைக்குள் ஒரு மர்ம டிரோன் நுழைந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட இந்திய எல்லைக் காவல்படை, அந்த டிரோனை சுட்டு வீழ்த்தியது. அப்போது அந்த டிரோன் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.
"பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள பாபாபிர் என்ற எல்லைக்கு அருகில் நேற்று முன்தினம் இரவில் அந்த டிரோன் நுழைந்ததாகவும், எல்லை காவல்படையினர் சுட்டதால், மீண்டும் அது பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி சர்வதேச எல்லையை தாண்டி விழுந்ததாகவும்' இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.