இந்தியா

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு

Published On 2023-01-30 03:44 GMT   |   Update On 2023-01-30 03:44 GMT
  • 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.
  • நடைபயணம் நிறைவு பிறகு எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.

அவரது நடைபயணத்தின்போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் பாத யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை இன்று நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News