இந்தியா

கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி

Published On 2022-07-18 09:49 IST   |   Update On 2022-07-18 09:49:00 IST
  • துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார்.
  • அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

அங்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நோய் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்முடிவுகள் வந்த பிறகே அவருக்கும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

இதற்கிடையே கேரள சுகாதாரத்துறையினர் அங்குள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

Similar News