- கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
- சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
திருப்பதி:
கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று முதல் முறையாக கடற்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலை 4 மணி அளவில் சூரியன் மறையும் பின்னணியில் கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
சாகச நிகழ்ச்சியை கடற்கரை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் மாடி மற்றும் பால்கனிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் தாழ்வாக பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஏரோ பாட்டிக்ஸ் கமாண்டோ படை வீரர்கள் விமானத்தில் பறந்து வந்து ஸ்கை டைவிங் செய்தபடி விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கடற்கரை மணலில் இறங்கினர். இந்த சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் கடற்கரை சாலையை நெருங்கி வந்து தீப்பிழம்பை கொட்டியது.
கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
மீண்டும் டிசம்பர் 2-ந்தேதி மற்றும் இறுதி சாகச நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.