இந்தியா
டேங்கர் லாரியை விழுங்கிய சாலை- பதைபதைக்க வைக்கும் வீடியோ
- விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேயில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் ஒன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
55 வினாடிகள் ஓடும் வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருக்கும் மாநகராட்சியின் தண்ணீர் டேங்கர் ஒன்று மெல்ல நகர்ந்த போது ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பின்பக்க சக்கரங்கள் முதலில் விழுந்தது. அதன்பின் வாகனம் முழுவதும் பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தில் மூழ்கிய டேங்கரை மீட்டனர். திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.