இந்தியா

சூது கவ்வும் பட பாணியில் தன்னைத் தானே கடத்திய சிறுவன்.. ரூ. 10 லட்சம் கேட்டது இதற்கா?

Published On 2024-08-26 14:20 GMT   |   Update On 2024-08-26 14:20 GMT
  • சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
  • தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 17 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், சிறுவனை யாரும் கடத்தவில்லை என்று, தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியதும் தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இந்த சிறுவன் மெசேஜ் அனுப்பி தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட பெண்ணின் குடும்பம் சிறுவனின் குடும்பத்திடம் இதை பற்றி தெரிவித்துள்ளனர்.

இதனால் பயப்பட்ட சிறுவன் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவரது தந்தைக்கு செல்போனில் அழைத்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம். உங்கள் மகனை விடுவிக்க ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் மிரட்டியுள்ளான். பின்னர் தனது செல்போனை சிறுவன் சுவிட்ச் ஆப் செய்துள்ளான்.

சிறுது நேரம் கழித்து தனது போனை சிறுவன் சுவிட்ச் ஆன் செய்த போது சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.

Tags:    

Similar News