திருப்பதி கோவிலில் மே மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
- குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
- ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.
இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.