இந்தியா

மத்திய பிரதேசத்தில் ருசிகர சம்பவம்- இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இரட்டையர்கள்

Published On 2023-06-26 05:22 GMT   |   Update On 2023-06-26 05:31 GMT
  • திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
  • இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லதா மற்றும் லட்சுமி.

இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான அமன் மற்றும் ரிசப்பை திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் கோலாகலமாக நடைபெற்றது.

இரட்டையர்களின் இந்த இரட்டை திருமணத்தை பார்க்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் குவிந்தனர். திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஹோம குண்டத்தை மணமக்கள் 7 முறை வலம் வந்தனர். பின்னர் இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த 2 ஜோடிகளும் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்ததாக இந்த திருமணத்திற்கு வந்தவர்கள் கூறினர்.

திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் பிரதீப் திவேதி கூறுகையில், நான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். ஆனால் இதுபோன்ற இரட்டையர்களின் திருமணத்தை நடத்துவது இதுவே முதல் முறை என்றார்.

இரட்டை சகோதரிகளின் இளைய சகோதரன் கைலாஷ் கூறுகையில், லதா, லட்சுமி ஆகியோர் பிறந்ததில் இருந்து தற்போது வரை ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். தற்போதும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News