இந்தியா

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு        நிலச்சரிவு நடைபெற்ற பகுதி

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு- வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

Published On 2022-06-19 15:08 GMT   |   Update On 2022-06-19 16:48 GMT
  • வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 4,500 உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
  • பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர்.

கவுகாத்தி:

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டள்ள அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் ராணுவ வீரர்கள் 4வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 4500 உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண முகாம்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கச்சார் மாவட்டத்தில் உள்ள போராகாய் தேயிலைத் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் அசாம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே திப்ருகரின் ரோமோரியாவில் பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

Similar News