இந்தியா

சாலையில் தீ வைத்து 'ரீல்ஸ்' எடுத்த வாலிபர்- வீடியோ வைரல்

Published On 2024-12-30 09:25 GMT   |   Update On 2024-12-30 09:25 GMT
  • தீ முன்பு நின்று ‘ரீல்ஸ் வீடியோ’ எடுத்துள்ளார்.
  • வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கண்டித்து பதிவிட்டனர்.

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகவே வாலிபர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் முன்பு நின்று கொண்டு வாலிபர் ஒருவர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தீ முன்பு நின்று 'ரீல்ஸ் வீடியோ' எடுத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கண்டித்து பதிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.



Tags:    

Similar News