இந்தியா (National)

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: குளிக்க தடை

Published On 2024-10-23 06:38 GMT   |   Update On 2024-10-23 06:38 GMT
  • இன்று 11-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது.
  • நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்:

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக இன்று 11-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழக மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்து வந்தன. மழையின் அளவு குறைந்த தால் மீண்டும் நீர்வரத்து குறைய தொடங்கியது.

இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டன.

அந்த உபரி நீர் பிலிக் குண்டுலு வழியாக காவிரி ஆற்றில் நேற்று முதல் வர தொடங்கியதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.


ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டி ருந்தது. கர்நாடகா அணை களில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

இந்த நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கும் மேல் தண்ணீர் சென்றது.

அதிகளவு நீர் வரத்து என்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்ப தற்கும் பரிசல் சவாரி மேற்கொள்வதற்கும் தொடர்ந்து 11-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

மேலும், நீர்வரத்து அதிகரிப்பால், தடையை மீறி காவிரி ஆற்றங்கரை யோரம் பகுதிகளிலும் பொதுமக்கள் குளிக்க கூடாது என்று போலீசார் அறிவித்தப்படி கண்கா ணித்து வருகின்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ள தால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News