இந்தியா
மாநில அந்தஸ்து கொடுக்கும் வரை நாம் யூனியன் பிரதேசம்தான்: எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு உமர் அப்துல்லா பதில்

மாநில அந்தஸ்து கொடுக்கும் வரை நாம் யூனியன் பிரதேசம்தான்: எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு உமர் அப்துல்லா பதில்

Published On 2025-03-25 18:54 IST   |   Update On 2025-03-25 18:54:00 IST
  • யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
  • பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News