இந்தியா

வானுயர கட்டடத்தில் டிராலி அறுந்து அந்தரத்தில் தொங்கிய பணியாளர்கள் - பரபரப்பு வீடியோ

Published On 2024-09-28 14:28 GMT   |   Update On 2024-09-28 14:28 GMT
  • இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
  • வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பணியின்போது டிராலி அறுந்து இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. தலைநகர் நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வானுயர காட்டம் ஒன்றில் உயரத்தில் வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது டிராலியின் கயிறு அறுந்துவிழுந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு ரோப் மூலம் அவர்கள் கீழே விழாமல் உயிர்தப்பியுள்ளனர். அவர்களின் இடுப்புப் பகுதியில் பாதுகாப்பு ரோப் கட்டப்பட்ருந்த நிலையில் அதன் பேலன்சில் இருவரும் அந்தரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தும் சத்தம் கேட்டு சக பயணிகள் அவர்களை மேலே இழுத்து காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News