செய்திகள்

2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் எடுக்கப்பட்ட மாதிரிகள்: ஊக்கமருந்து மறுசோதனையில் 23 பேர் சிக்கினர்

Published On 2016-05-28 04:13 GMT   |   Update On 2016-05-28 04:13 GMT
2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் எடுக்கப்பட்ட 265 மாதிரிகளில் 23 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.
பெர்லின் :

2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களிடம் பெறப்பட்ட சிறுநீர், ரத்த மாதிரிகளில் சோதனைக்குட்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த மாதிரிகள் சமீபத்தில் நவீன முறையில் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு சோதிக்கப்பட்ட 265 மாதிரிகளில் 23 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது. இவர்கள் 6 நாடுகளை சேர்ந்த 5 வகையான விளையாட்டுகளில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

ஏற்கனவே 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கின் போது எடுக்கப்பட்ட மாதிரிகள் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 31 பேர் சிக்கினர். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News