செய்திகள்
‘மன்கட்’ விவகாரம் குறித்து பாண்டிங் சொன்னது என்ன? - அஸ்வின் ருசிகர பதில்
‘மன்கட்’ விவகாரம் குறித்து தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் சொன்னது என்ன என்பது குறித்து அஸ்வின் பதில் அளித்துள்ளார்.
துபாய்:
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்சை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்வது போல் எச்சரிக்கையோடு விட்டார். இனி பந்து வீசுவதற்கு முன்பே எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்தால் காலி தான் என்று இறுதி எச்சரிக்கையும் விடுத்தார். இந்த விவகாரம் குறித்து அஸ்வின் நேற்று அளித்த பேட்டியில்,
‘போட்டி முடிந்து அன்றிரவு தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கிடம் விவாதித்தேன். அப்போது பாண்டிங், ‘பிஞ்ச் எவ்வளவு தூரம் நகர்ந்து சென்று விட்டார். நானே எழுந்து அவரை ரன்-அவுட் செய்து விடு என்று சொல்லலாம் என்று நினைத்தேன்’ என்று கூறினார். அதற்கு நான், உங்கள் சகநாட்டு வீரர் பற்றி ஏன்இப்படி சொல்கிறீர்கள் என்றேன். அதற்கு பாண்டிங், ‘தவறு யார் செய்தாலும் தவறு தான். இது பற்றி ஐ.சி.சி. கமிட்டி கூட்டத்தில் பேசி வருகிறேன். இந்த தவறுக்கு ரன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.
என்னை பொறுத்தவரை ‘ரமணா’ பட பாணியில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். பந்து வீசப்படுவதற்கு முன்பே பேட்ஸ்மேன் கிரீசை விட்டு தாண்டினால் 10 ரன்களை அணியின் ஸ்கோரில் இருந்து கழிக்க வேண்டும். இதன் பிறகு யாரும் கிரீசை விட்டு வெளியேறமாட்டார்கள்’ என்றார்.