விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

Published On 2023-07-18 11:12 GMT   |   Update On 2023-07-18 11:12 GMT
  • கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.
  • 19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம் பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி:

ஆசிய விளையாட்டுப்போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

கடைசியாக ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு நடந்தது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம் பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 40 விளையாட்டுக்கள் 482 பிரிவில் நடைபெறுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை கடந்த 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துசண்டை, செஸ், கிரிக்கெட், வாள் வீச்சு, ஆக்கி, கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

ஜகார்தாவில் 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 524 பேர் கொண்ட இந்திய அணி 36 விளையாட்டுகளில் பங்கேற்றது. கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம், ஆகமொத்தம் 69 பதக்கங்களை பெற்று இந்தியா 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

Tags:    

Similar News