சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: சீன வீராங்கனை கியாங் வாங் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- இந்திய வீராங்கனை கர்மன்தண்டி முதல் சுற்றில் 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் பேக்கியூட்டை அதிர்ச்சி கரமாக வீழ்த்தினார்.
- 5-வது வரிசையில் உள்ள ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் ஜிம்மென்ஸ் விக்டோரியாவை வென்றார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிது.
சென்னையில் முதல் முறையாக நடைபெறும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
இந்த போட்டின் 6-வது தர வரிசையில் இருக்கும் சீனாவை சேர்ந்த கியாங் வாங் முதல் சுற்றில் பெல்ஜியத்தை சேர்ந்த யாமினா விக்மேயரை எதிர்கொண்டார்.
இதில் வாங் 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 2-வது ரவுண்டில் தகுதிச் சுற்று வீராங்கனையான ஹிபினோவை (ஜப்பான்) சந்திக்கிறார்.
ஹிபினோ தொடக்க சுற்றில் மற்றொரு தகுதி சுற்று வீராங்கனையான ஜானா பெட்டை (செக்குடி யரசு) 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
7-ம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா)7-5, 6-2 என்ற கணக்கில் அனா பிஸின்கோ வாவை (ரஷியா) தோற்கடித்தார். அவர் அடுத்த சுற்றில் போலந்தை சேரந்த கதர்சினா கவாவை எதிர் கொண்டார். சுவா 6-4, 6-3 என்ற கணக்கில் அஸ்ட்ரா சர்மாவை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.
5-வது வரிசையில் உள்ள ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் ஜிம்மென்ஸ் விக்டோரியாவை வென்றார். அவர் 2-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த லிண்டாவை எதிர் கொள்கிறார். லிண்டா 4-6, 6-1, 6-3 என்ற கணக்கில் லியாங்கை (சீன தைபே) தோற்கடித்தார்.
இந்திய வீராங்கனை கர்மன்தண்டி முதல் சுற்றில் 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் பேக்கியூட்டை அதிர்ச்சி கரமாக வீழ்த்தினார். அவர் 2-வது சுற்றில் யூஜின் பவுச்சர்ட்டை (கனடா) சந்திக்கிறார்.
இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா), ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியா கசனோவை இன்று சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான அங்கீதா ரெய்னா தொடக்க சுற்றில் 4-வது வரிசையில் இருக்கும் தாட்ஜினா மரியாவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.