விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

Published On 2024-09-22 13:22 GMT   |   Update On 2024-09-22 13:22 GMT
  • இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது.
  • இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றது.

45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் 10 ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது. இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்ற இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கி இருந்தது. இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகளில் இந்தியா அணி முன்னணி வகித்த நிலையில், ஆண்கள் அணி பத்து போட்டிகள் முடிவில் 19 புள்ளிகளை பெற்றது.

இதை தொடர்ந்து அதிக புள்ளிகளை பெற்ற இந்தியா செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

Tags:    

Similar News