கிரிக்கெட் (Cricket)
null

ரோகித் சர்மா இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்: பத்திரிகையாளர் கேள்விக்கு கம்பீர் அளித்த பதில்...!

Published On 2025-03-05 15:44 IST   |   Update On 2025-03-05 16:07:00 IST
  • ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். அவருடைய ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் விமர்சிக்கப்பட்டது.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் அவரது எதிர்காலம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டு வருகிறது. நேற்றைய அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டிக்குப்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் "ரோகித் சர்மாவின் ஃபார்ம், அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லுங்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கவுதம் கம்பீர் பதில் கூறியதாவது:-

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக நான் என்ன சொல்ல முடியும்?. நாங்கள் முற்றிலும் பயமில்லாத மற்றும் தைரியமான அணுகுமுறையை விரும்புகிறோம்.

கேப்டன் இதுபோன்ற துடிப்புடன் பேட்டிங் செய்யும்போது, டிரெஸ்ஸில் ரூமில் சிறந்த சிக்னலை கொடுக்கிறது. நீங்கள் ரன்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் விளையாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் இடையிலான வேறுபாடு.

நீங்கள் புள்ளி விவரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் அப்படியில்லை. அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். நாங்கள் நம்பர் அல்லது சராசரியை பார்ப்பதில்லை. கேப்டன் முதன் நபராக தன்னுடைய கையை தூக்கும்போது (செயல்பாட்டில் முதன் நபராக இருக்கும்போது) டிரெஸ்ஸிங் ரூமில் அதைவிட சிறந்ததாக ஏதும் இருக்க முடியாது" என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் நான்கு தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News