கிரிக்கெட் (Cricket)

3வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா

Published On 2024-12-16 01:18 GMT   |   Update On 2024-12-16 01:18 GMT
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி காபாவில் நடைபெற்று வருகிறது.
  • ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்து ஆல் அவுட்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றன. இதனிடையே இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி காபாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 405 ரன்களை குவித்து ஏழு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்த நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இதன் காரணமாக அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெறும் 40 ரன்களை சேர்த்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News