IND vs AUS: கேட்ச் பிடித்ததும் கூச்சலிட்ட ரசிகர்கள் - டென்ஷனில் கோலி கொடுத்த ரியாக்ஷன் - வீடியோ
- உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்
- உடனேயே லபுசனே, பெய்ல்ஸை மீண்டும் எடுத்து முன்பு இருந்தது போலவே மாற்றி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசனே 55 பந்துகள் ஆடி 12 ரன்களில் எடுத்திருந்த நிலையில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஸ்லெட்ஜிங் செய்து அவரது விக்கெட்டை எடுக்க முயன்றார்.
இதற்க்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். 33வது ஓவரில் ஸ்டம்ப்பில் இருந்த பெய்ல்ஸ் முகமது சிராஜ் மாற்றி வைத்தார். ஆனால் உடனேயே லபுசனே, பெய்ல்ஸை மீண்டும் எடுத்து முன்பு இருந்தது போலவே மாற்றி வைத்தார்.
தொடர்ந்து பந்துவீசியும் சிராஜால் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில் அடுத்த ஓவரில் நித்திஸ் ரெட்டி வீசிய பந்தில் விராட் கோலிக்கு கேட்ச் கொடுத்து லபுசனே அவுட் ஆனார். அப்போதும் ரசிகர்கள் கூச்சல் எழுப்பிய நிலையில் விராட் கோலி ஆடியன்ஸை நோக்கி அமைதியாக இருக்கும்படி சைகை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.