3வது டெஸ்ட்: இங்கிலாந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
3வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சாண்ட்னெர் 76 ரன்களும் டாம் லாதம் 63 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திலாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வில்லியம் ஓ'ரூர்க் மற்றும் சாண்ட்னெர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 204 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக வில் யங் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 50 ரன்கள் அடித்து ஆடி வருகிறார்.
இதன்மூலம் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.