துப்பாக்கியை பிடிங்க ருதுராஜ்.. சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை டோனி விட்டுக் கொடுத்தது இப்படித்தான்!
- கடந்த வருட ஐபிஎல் இன் போது டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுபெற்றார்.
- இந்த ஆண்டு நான் அணியை வழிநடந்த போவதில்லை - நீதான் கேப்டன்
ஐபிஎல் போட்டிகளில் களமாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர முகம் எம்.எஸ். டோனி. கடந்த வருட ஐபிஎல் இன் போது டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுபெற்றார்.
இந்நிலையில் கேப்டன்சி கைமாறியது குறித்து ருதுராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு ஐபில் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எம்.எஸ். டோனி என்னிடம் வந்து, 'இந்த ஆண்டு நான் அணியை வழிநடந்த போவதில்லை - நீதான் கேப்டன்' என்றார்.
முதல் ஆட்டத்தில் இருந்தே நான்தான் வழிநடத்த வேண்டுமா? என கேட்டதற்கு 'இது உன்னுடைய அணி, நீதான் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், நான் இதில் தலையிட மாட்டேன்.
ஃபீல்டிங்கில் 50% நீயும் 50% நானும் பார்த்து கொள்ளலாம். இருந்தாலும் என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்றார். அந்த நம்பிக்கை மிகப்பெரியது என்று நெகிழ்ச்சியுடன் ருதுராஜ் பகிர்ந்துள்ளார்.