கிரிக்கெட் (Cricket)

புலவாயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே வெற்றிபெற 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து

Published On 2025-02-09 03:31 IST   |   Update On 2025-02-09 03:31:00 IST
  • முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்தது.

புலவாயோ:

ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் மீதம் 2 நாள் உள்ள நிலையில் 254 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 7 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் இப்போட்டியின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News