கிரிக்கெட் (Cricket)

ஆட்டோகிராப் கேட்டு வந்த சிறுவனிடம் அன்பாக உரையாடிய ரோகித், பண்ட்- வைரல் வீடியோ

Published On 2025-02-11 16:40 IST   |   Update On 2025-02-11 16:40:00 IST
  • இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.
  • இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் ஹோட்டலில் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளம் ரசிகர் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் போடும் படி கேட்டுக்கொண்டார். மேலும் அந்த சிறுவனிடம் ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா சிறிது நேரம் உரையாடினர்.

பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வாலிடமும் ஆட்டோகிராப் வாங்கிங் கொண்டு அந்த சிறுவன் அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

Tags:    

Similar News