கிரிக்கெட் (Cricket)

ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றார் வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Published On 2025-02-11 17:22 IST   |   Update On 2025-02-11 17:22:00 IST
  • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது.
  • ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.

துபாய்:

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய ஜோமல் வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் கொங்கடி திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதேபோல் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி பெற்றார்.

Tags:    

Similar News