கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: இறுதிப்போட்டியில் சந்தித்து கொண்ட ஆகாஷ்- காவ்யா.. வைரலாகும் புகைப்படம்

Published On 2025-02-11 17:42 IST   |   Update On 2025-02-11 17:42:00 IST
  • தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
  • தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

கேப்டவுன்:

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

இதில் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தகுதிப்பெற்றன. இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் இரு அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் காவ்யா மாறன் மைதானத்தில் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் அரவணைத்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து பிரிந்து சென்றனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News