கிரிக்கெட் (Cricket)

சிக்சர் கிங்.. ரோகித்துக்கு வாழ்த்து.. கோலிக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ் கெய்ல்

Published On 2025-02-11 21:49 IST   |   Update On 2025-02-11 21:49:00 IST
  • ரோகித் சர்மா தற்போது டவுனில் புதிய சிக்சர் கிங்.
  • விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும்.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று 2 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். அதனால் பல விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதத்தை அடித்து பார்முக்கு திரும்பினார். அதில் 12 பவுண்டரிகள் ஏழு சிக்சர்கள் அடங்கும்.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது அதிக சிக்சர்கள் (337) விளாசிய கிறிஸ் கெயிலின் உலக சாதனையை ரோகித் முறியடித்தார்.

இந்த பட்டியலில் பாகிஸ்தானின் வீரர் அப்ரிடி 351 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகளும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டுக்கு எப்போதுமே ஒரு புதிய பொழுதுபோக்காளர் தேவை. நான் செய்தது போலவே இத்தனை வருடங்களாக ரோகித் சர்மா ரசிகர்களை பொழுது போக்கி வருகிறார். எனவே அவர் தற்போது டவுனில் புதிய சிக்சர் கிங். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் அவர் நிறைய சிக்சர்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.

விராட் கோலி இப்போதும் உலகில் சிறந்த வீரர். பார்மை தாண்டி விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர். அவருடைய புள்ளி விபரங்களும் அனைத்து வகையான பார்மெட்டில் எவ்வளவு சதங்கள் அடித்துள்ளார் என்பது அவற்றை நிரூபிக்கும். இது அனைத்து வகையான வீரர்களும் செல்லக் கூடிய ஒரு கடினமான காலமாகும்.

இது விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும். ஆனால் இது சாதாரணமாக நடக்கக் கூடியதாகும். இது போன்ற சூழ்நிலைகளில் அவர் தம்மைத்தாமே ஆதரவு கொடுத்துக் கொண்டு மீண்டும் வரவேண்டும்.

என்று கூறினார். 

Tags:    

Similar News