இவருக்கு மாற்று வீரரே இல்லை.. கிரிக்கெட்டின் ரொனால்டோ பும்ரா.. இங்கிலாந்து முன்னாள் வீரர் புகழாரம்
- என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது.
- மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் பும்ரா. என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது. அதனால் தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன். ஏனெனில் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகில் மிகவும் சிறந்தவர்.
இதுதான் இந்திய அணியின் பார்வையிலிருந்து என்னுடைய கருத்து. அது உங்களுடைய சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வது போன்ற விஷயமாக இருக்கும்" முக்கியமான பும்ரா: "15 வருடங்களுக்கு முன்பாக ரெனால்டோவை நீங்கள் அணியில் இருந்து மாற்ற முடியாது. அதைத் தான் பும்ராவிடம் இந்தியா செய்யும் என்று நான் நினைக்கிறேன்.
அவர் இல்லாமல் 14 பேர் கொண்ட அணியாகும். குரூப் சுற்றுப்போட்டிகளை விளையாடுவதற்கு அவர்களை எனக்குப் போதும். அவரை நாம் அரையிறுதி விளையாட வைக்க முடியும். மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர் பும்ரா என்பதால் மாற்று வீரர் இல்லை.
என்று கூறினார்.