கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர் யார் தெரியுமா?

Published On 2024-11-25 14:09 GMT   |   Update On 2024-11-25 14:09 GMT
  • 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
  • 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் என்பவர் நடத்தி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த கலை சேகரிப்பாளரான மல்லிகா சாகர், அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியில் கலை வரலாறு பட்டப்படிப்பை படித்தார்.

2021 புரோ கபாடி லீக் வீரர்களின் ஏலத்திற்கான ஏல மேலாளராக மல்லிகா சாகர் பணியாற்றினார். பின்னர் 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை நடத்திய மல்லிகா, ஐபிஎல் மெகா ஏலத்தை தற்போது நடத்தி வருகிறார்.

இதற்கு முன்னதாக ரிச்சர்ட் மேட்லி மற்றும் ஹியூ எட்மீட்ஸ் போன்றவர்கள் ஏலத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News