விளையாட்டு

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார் மனு பாக்கர்

Published On 2024-08-05 14:40 GMT   |   Update On 2024-08-05 14:40 GMT
  • ஒலிம்பிக் நிறைவு விழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
  • இதில் மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்துகிறார்.

பாரீஸ்:

ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா துப்பாக்கி சுடுதலில் இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது.

தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.

இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏந்திச்செல்ல விரும்புகிறீர்களா என கேட்டபோது, இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்திச் செல்கிறார் என தகவல்கள் வெளியாகின.

Tags:    

Similar News