விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
- இந்திய ஜோடி காலிறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்திய ஜோடி கொரிய ஜோடியுடன் மோதியது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கொரியா வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.