விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி கால் இறுதியில் அரியானா- மிசோரமை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி

Published On 2024-11-11 09:13 GMT   |   Update On 2024-11-11 09:13 GMT
  • ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா-மிசோரம் அணிகள் மோதின.
  • அரியானா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை:

தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு (சி பிரிவு), கர்நாடகா (டி), பஞ்சாப் (ஏ), உத்தரபிரதேம் (எப்), ஒடிசா (இ), மராட்டியம் (ஜி) ஆகிய 6 அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்று விட்டன.

இன்று காலை 'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஹரியானா-மிசோரம் அணிகள் மோதின. இதில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 'ஹாட்ரிக்' வெற்றி இதுவாகும். இமாச்சல பிரதேசத்தை 12-1 என்ற கணக்கிலும், தெலுங்கானாவை 5-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் ஹரியானா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

கால் இறுதியில் நுழையும் கடைசி அணி இன்று மாலை தெரியும். 'எச்' பிரிவில் உள்ள மணிப்பூர், பெங்கால் இடையே போட்டி நிலவுகிறது.

நாளை ஓய்வு நாளாகும். 10-ந்தேதி கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-உத்தரபிரதேசம், ஹரியானா-மராட்டியம், கர்நாடகா-ஒடிசா அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி யாருடன் மோதும் என்று இன்று மாலை நடைபெறும் போட்டி முடிவில் இருந்து தெரியவரும்.

Tags:    

Similar News