விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்: ஹர்மன்பிரித் சிங் கோல் மழையால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
- பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியின் 2 கோல்களையும் ஹர்மன்பிரித் சிங் அடித்து அசத்தினார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இந்த இரண்டு கோல்களையும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அடித்தார்.
இதன்மூலம் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.