விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி - காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published On 2023-02-16 19:12 GMT   |   Update On 2023-02-16 19:12 GMT
  • முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானை இந்தியா அபார வெற்றி பெற்றது.
  • இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமிரேட்சையும் வீழ்த்தியது.

துபாய்:

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் 5-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று 3-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

எச். எஸ்.பிரனோய் 18-21 21-13 25-23 என்ற கணக்கில் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 21-13 21-17 என்ற கணக்கில் வென்றார்..

அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 16-21 10-21 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது. பெண்கள் இரட்டையரில் 23-21, 21-15 என்ற கணக்கில் வென்றார். இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News