கிரிக்கெட் (Cricket)
null

வீடியோ: 3-ம் நடுவர் ஏன் அதை செய்யவில்லை.. சர்ச்சையை ஏற்படுத்திய கேஎல் ராகுல் விக்கெட்

Published On 2024-11-22 05:42 GMT   |   Update On 2024-11-22 06:04 GMT
  • சிறப்பாக விளையாடிய ராகுல் 74 பந்துகளில் 26 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
  • இவரது அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்து வந்த விராட் கோலி 12 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கே.எல். ராகுல் ஒருபக்கம் தாக்குப்பிடித்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் 74 பந்துகளில் 26 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பேட்டில் சென்றதாக ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். ஆனால் களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே ஆஸ்திரேலியா ரீவ்யூ-க்கு சென்றது. அப்போது ராகுல் பேட்டிற்கும் பந்திற்கும் இடைவெளி இருப்பது தெளிவாக தெரிந்தது. பேட் அவரது பேடில் பட்டதும் தெளிவாக தெரிந்தது.

ஆனால் மற்றோரு பக்கத்தில் இருந்தும் பார்க்கும் போது பேட்டிற்கு அருகில் செல்வது போன்றும் அப்போது ஸ்னிக்கோ மீட்டர் ஸ்பைக்கை காட்டியதால் 3-ம் நடுவர் அவுட் வழங்கினார். 

ஏமாற்றமடைந்த ராகுல், பெவிலியனுக்குத் திரும்பிச் செல்லும்போது, கள நடுவரிடம் பேச்சுவார்த்தை செய்தார். பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதாகவும், மூன்றாவது நடுவர் களத்தில் உள்ள நடுவர் முடிவைக் கடைப்பிடிக்க போதுமானதாக இருந்திருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். ஆனால் அவரது பேச்சு எடுபடவில்லை. நடுவர் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும் என்ற வகையில் அவர் வெளியேறினார்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் ஹாட்ஸ்பாட் வசதி உள்ளது. ஸ்னிக்கோ மீட்டரில் சந்தேகம் எழுந்தால் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி பார்த்திருக்கலாம். ஆனால் 3-ம் நடுவர் அதை செய்யவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News