கிரிக்கெட் (Cricket)

நக்கலடிக்கும் வகையில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்- பதிலடி கொடுத்த பும்ரா

Published On 2024-11-22 06:43 GMT   |   Update On 2024-11-22 06:43 GMT
  • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்கியது.
  • இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

பெர்த்:

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.

இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று இரு அணிகளின் கேப்டகளும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதில் ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் ஒருவர், ஒரு மித வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியை வழிநடத்துவது எப்படி இருக்கிறது? என்று பும்ராவை கிண்டலடிக்கும் வகையில் கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பும்ரா, "என்னால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடியும். குறைந்தபட்சம் என்னை வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் என்றாவது அழைக்கலாம்" என்று பதிலடி கொடுத்தார்.

Tags:    

Similar News